Derek Prince Ministries India
At the End of Time - Tamil
At the End of Time - Tamil
Couldn't load pickup availability
இன்று பல கிறிஸ்தவர்கள் இந்த வாழ்க்கையில் தேவன் தங்களுக்கு என்ன செய்வார் என்று மட்டுமே யோசிக்கிறார்கள். இருப்பினும், தேவன் நமக்காக வைத்திருக்கும் எல்லாவற்றிலும் இந்த வாழ்க்கை ஒரு சிறிய பகுதியே. -டெரிக் பிரின்ஸ்
எபிரேயர் 6:1-2 இல் வழங்கப்பட்டுள்ள இறுதி இரண்டு அடிப்படைக் கோட்பாடுகள் சரீரத்தின் உயிர்த்தெழுதல் மற்றும் நித்திய நியாயத்தீர்ப்பு ஆவன. இந்த கோட்பாடுகள் நம்மை காலத்திலிருந்து வெளியேற்றி நித்தியத்திற்குள் அழைத்துச் செல்கின்றன. இப்படி நித்தியத்தின் மீது கவனம் செலுத்துவதன் நோக்கம், இந்த வாழ்க்கையில் மட்டுமே நம் பார்வையை வைக்கக்கூடாது என்பதை நமக்குக் கற்பிப்பதாகும்.
இந்த கையேட்டில், டெரிக் பிரின்ஸ் நித்தியத்தின் தன்மையை வெளிப்படுத்துகிறார் மேலும் இறுதி கால நிகழ்வுகளின் தளத்தில் என்ன இருக்கிறது என்பதை நமக்கு காண்பிக்கிறார். அவர் பின்வரும் ஜெபத்துடன் நிறைவு செய்கிறார்:
பிதாவே, என் வாழ்வின் தற்காலிகமான, காணக்கூடிய அம்சங்களைக் காட்டிலும் நித்தியமான, கண்கள் காணாத தளத்தைப் பார்க்க என் கண்களைப் பயிற்றுவிக்க எனக்கு உதவி செய்யும். இந்த பூமி என் நித்திய வீடு அல்ல என்பதை நினைவில் கொள்ள எனக்கு உதவி செய்யும். வேதாகம தீர்க்கதரிசனத்தின் வெளிச்சத்தில் இறுதி கால நிகழ்வுகளை பகுத்தறிந்து, கர்த்தராகிய இயேசு வரும்போது அவரைச் சந்திக்க நான் ஆயத்தமாக இருக்க உதவி செய்யும். ஆமென்.
Share

