Derek Prince Ministries India
Power Of Proclamation - Tamil
Power Of Proclamation - Tamil
Couldn't load pickup availability
தேவனுடைய வார்த்தையை அறிகையிடுவதின் முலம் அளப்பறிய ஆற்றல் வெளிப்படுகிறது.
தங்களுக்குரிய இந்த வியத்தகு ஆற்றலைக் குறித்து, அநேகக் கிறிஸ்தவர்கள் அறியாதவர்களாயுள்ளனர். சொந்தத் தேவைகளைச் சந்திக்கப்படுவதிலிருந்து அகிலலோகப் பிரச்சனை வரை, பலதரப்பட்ட பிரச்சனைகளுக்கு, தேவனுடைய வார்த்தை தீர்வு காணும் வகையில் உள்ளது.
பல்லாண்டுகளாக டெரிக் பிரின்ஸ் தனது ஊழியத்தில் தேவனுடைய வார்த்தையை தினமும் அறிகையிட்டு வருகிறார். ஆவிக்குரிய தளத்தில் இந்த அறிக்கைகள் அமோக மாற்றங்களைத் தோற்றுவிப்பதை, தன் சொந்த அனுபவத்தில் கண்டுள்ளார்.
நாம் சந்திக்கும் பிரச்சனை, எப்படிப்பட்டதாயினும் அதற்கு நேராக தேவனுடைய வார்த்தையினை அறிகையிடுவதின் முலம் பலனடைவது எவ்வாறு என இந்நூல் புகட்டுகிறது. இதன் முலம் சூழலை மாற்றியமைக்கும், படைப்பின் ஆற்றல் வெளிப்படுகிறது. தேவனுடைய வார்த்தைகளை அறிகையிடும் சிலாக்கியமும் பொறுப்பும் ஒவ்வொரு விசுவாசிக்கும் உள்ளது.
இப்படி அறிகையிடுவதற்கான வசன ஆதாரத்தை இந்நூலில் முதலில் கூறிவிட்டு, பின்பு நடைமுறையில் பின்பற்றக்கூடிய ஆலோசனைகளை இதன் ஆசிரியர் அளிக்கிறார். பின்பு தினமும் பயன்படுத்துவதற்குரிய பல வேத பகுதிகள் தொகுத்து இறுதியில் அளிக்கப்பட்டுள்ளது.
Share

