Derek Prince Ministries India
Why Israel? - Tamil
Why Israel? - Tamil
Couldn't load pickup availability
கிறிஸ்தவர்களாகிய நாம், புரிந்துக்கொள்ள முடியாத அளவிற்கு இஸ்ரவேலுக்கு கடன் பட்டிருக்கிறோம் என்பதை ஒப்புக்கொண்டு, அந்த முற்றிலும் கடன்பட்ட நிலையிலிருந்து எப்போதும் அவர்களுக்காக ஜெபிக்கவும் வேண்டும். யூதன் என்ற வார்த்தை, பழைய ஏற்பாட்டில் 75 முறையும், புதிய ஏற்பாட்டில் 188 முறையும் காணப்படுகிறது. மாறாக கிறிஸ்தவன் என்ற வார்த்தை, புதிய ஏற்பாட்டில் வெறும் 3 முறை மட்டுமே காணப்படுகிறது. இஸ்ரவேலை குறித்து, சில காரியங்களை அறியாவிட்டால், நீங்கள் வேதாகமத்தை முழுமையாக புரிந்துக்கொள்ள முடியாது. இஸ்ரவேலை குறித்து உங்களுக்கு குழப்பமாக இருந்தால், நீங்கள் வேதத்தை குறித்தும் குழப்பமுள்ளவர்களாகவே இருக்கிறீர்கள்.
"யூதர்கள் இல்லாமல், நமக்கு முற்பிதாக்களும் இல்லை, தீர்க்கதரிசிகளும் இல்லை, அப்போஸ்தலர்களும் இல்லை, வேதாகமமும் இல்லை - இரட்சகரும் இல்லை!"
-டெரிக் பிரின்ஸின் "இஸ்ரவேலுக்கு நமது கடன் என்ற புத்தகத்திலிருந்து ஒரு வாசகம்.
யூத மக்களோடு, இயேசுவுக்கு இருக்கும் அடையாளம் காணுதல் அவருடைய உலக வாழ்க்கை மற்றும் ஊழியத்தின் சில ஆண்டுகளுக்கு மட்டுமல்ல. அது நித்தியமானது. அவருடைய உயிர்த்தெழுதல் மற்றும் பரமேறுதலின் பல ஆண்டுகளுக்கு பின்னும், அவர் இன்னமும் யூதா கோத்திரத்தின் ராஜ சிங்கம் என அழைக்கப்படுகிறார்! அவர் யூதனாக இருந்தது மட்டுமல்ல, இன்னமும் யூதனாக தான் இருக்கிறார். பரலோகத்தில் ஒரு சிங்கம் உண்டென்பதை நான் நினைவுக்கூற வேண்டும். அவர் ஒரு யூதன், ஒரு நாள் அந்த சிங்கம் கெர்ச்சிக்க போகிறது.
Share

