Derek Prince Ministries India
Called to Conquer - Tamil
Called to Conquer - Tamil
Couldn't load pickup availability
உங்களுக்குரிய பணியைப் பெற்றுக் கொள்வதற்கான நேரமிது
உங்களுகென்று தேவன் முன் குறித்திருக்கிற வேலையை, இடத்தை, உறவுகளை, ஊழியத்தை நீங்கள் அறிந்து கொள்ள விரும்புகிறீர்ளா?
உங்களுடைய இந்த வாழ்கைக்கும், உங்களுடைய நித்தியத்திற்கும் உங்களுக்காகவே வடிவமைக்கப்பட்டிருக்கிற அந்த விசேஷமான முன்னேற்பாட்டிற்குள்ளும், பொறுப்பு மற்றும் சிலாக்கியத்திற்குள்ளும் நீங்கள் நுழைய விரும்புகிறீர்களா?
அவருடைய அழைப்பை நீங்கள் ஏற்றுக் கொள்ள விரும்புகிறீர்களா?
ஆம் என்றால், உங்களுடைய அழைப்பு என்ன என்பதை கண்டுபிடிக்குமபடி நீங்கள் ஆயத்தமாகி விட்டீர்கள். இது ரொம்பவும் சிக்கலானது அல்ல. இது நடைமுறை வாழ்க்கைக்கு மிகவும் உகந்ததாய் இருக்கிறது. கனிவோடும். காலங்கடந்த ஞானத்தோடும், அன்புக்குரிய வேதாகம ஆசிரியர் உங்களுக்கு உதவி செய்கிறார்:
உங்களுடைய வரங்களை அறிந்து கொள்ளும்படி உதவுகிறார்
தேவனுடைய ஊழியத்தில் உங்களுக்குரிய இடத்தைக் கண்டுபிடிப்பதற்கான ஏழு படிகளை வெளிப்படுத்துகிறார்.
பரிசுத்த ஆவியானவரின் சத்தத்தைக் கேட்பதில் உங்களுக்கு திராணியை வளர்க்க உதவுகிறார்.
உங்களுடைய அழைப்பை நிறைவேற்றுவதில் காணப்படும் மிகப் பெரிய தடையை நீங்கள் கண்டுபிடிக்கும்படி உங்களுக்கு உதவுகிறார்.
நரகத்தின் வல்லமைக்குள் உங்களைத் தடுக்கும்படி வேலை செய்து கொண்டிருக்கின்றன. ஆனால் இயேசு உங்களை தம்முடைய ராஜ்யத்தில் உன்னதமான பொறுப்பும், சிலாக்கியமும் உள்ள ஒரு இடத்திற்கு கொண்டு வர விரும்புகிறார்.
உங்களுக்கென்று அவர் வைத்திருக்கிற பணியோடு உங்களை நீங்கள் இணைத்துக் கொள்ளும்போது, ஜெயங்கொள்ளும்படி அழைக்கப்பட்டவராய் நீங்கள் இருப்பதினால் வரக்கூடிய நம்பிக்கையோடும், ஊக்கத்தோடும் இந்தக் கடைசி நாட்களில் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை நீங்கள் எதிர்கொள்வீர்கள்.
Share

