You Matter To God - Tamil
You Matter To God - Tamil
நீங்கள் எவ்வளவு மதிப்புள்ளவர்கள் என்பதை அறிந்திருக்கிறீர்களா?
நம்முடைய அடையாளத்தை எளிதில் தவற விடக்கூடிய ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பெரும்பாலும், நம்முடைய காலத்தின் அளவுகளோடு நம்மையே நாம் அளவிடுகிறோம். சில நேரங்களில், இதை உணராமலே செய்து விடுகிறோம். நாம் தேவனுக்கு எவ்வளவு முக்கியமான வர்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளும்போது மட்டுமே, நம்மைச் சுற்றியிருக்கிற உலகத்தையும், நித்தியத்தையும் முற்றிலும் புதிய ஒரு பார்வையில் நம்மால் பார்க்க முடியும்.
அழகான வேதவசனங்களுக்குள் மூழ்குவதன் மூலம், மனுஷனைக் குறித்த தேவனுடைய பார்வையை, பிரியத்திற்குரிய வேதபோதகர்
டெரிக் பிரின்ஸ் நமக்கு வழங்குகிறார். உங்களுடைய ஆளுமையின் மூன்று பகுதிகளாகிய ஆவி, ஆத்துமா மற்றும் சரீரத்தைக் குறித்து நீங்கள் கற்றுக் கொள்வீர்கள். கர்த்தராகிய இயேசுவின் வருகையில் நிகழப் போகிற ஆச்சரியமான மாற்றங்களையும், இன்னும் இன்னும் அதிக வியப்பானவைகளையும் நீங்கள் அனுபவிப்பீர்கள்!
நீங்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுவுக்கு விலையேறப்பெற்றவர்கள் என்ற ஒருபோதும் மாறாத மகத்தான சத்தியத்தை நீங்கள் பார்க்கும்படி டெரிக் உங்கள் கண்களைத் திறப்பார். ஆழமான, நுண்ணோக்குப் பார்வையோடும், கனிவாகவும் அவர் இதைச் செய்திருக்கிறார். குற்ற உணர்விலிருந்தும், பாதுகாப்பற்ற, ஆதரவற்ற உணர்விலிருந்தும், பயத்திலிருந்தும், நிந்தை அவமான உணர்வுகளிலிருந்தும் விடுதலையாக்கப்படுங்கள். தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட உலகத்தில், உங்களுக்குரிய விசேஷமான இடத்தை உறுதியாய் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் அப்படிச் செய்யும்போது, உங்களுக்காக எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்த ஒருவருடைய கண்கள் வழியாக உங்களுடைய மதிப்பை நீங்கள் பார்ப்பீர்கள்.
டெரிக் பிரின்ஸ் (1915-2003), டெரிக் பிரின்ஸ் சர்வதேச ஊழியங்களின்
ஸ்தாபகராகிய இவர் ஐம்பதுக்கும் அதிகமான புத்தகங்களை எழுதியிருக்கிறார். ஈட்டன் கல்லூரி மற்றும் கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகத்தில் இவர் கல்வி பயின்றார். எருசலேமிலுள்ள எபிரெய பல்கலைக்கழகத்திலும் இவர் கல்வி பயின்றிருக்கிறார். இவர் வேதாகமத்தை தெளிவாகவும், எளிமையாகவும் விளக்கிப் போதிக்கின்றார். இது இலட்சக்கணக்கான ஜனங்களின் விசுவாச அஸ்திபாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு உதவியாயிருக்கிறது. "வெற்றி வாழ்க்கைக்கான திறவுகோல்கள்" என்ற தலைப்பில் ஒலிபரப்பப்பட்ட வருடைய அன்றாட ரேடியோ உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் இலட்சக்கணக்கானோரைச் சென்றடைகின்றது.